வானம் கொட்டட்டும் – விமர்சனம்
மணிரத்னம் தமிழ் சினிமாவுக்கு புது வடிவம் தந்தவர். அவருடைய தயாரிப்பில் தனா இயக்கத்தில் சரத்குமார், ராதிகா, விக்ரம் பிரபு, சாந்தனு, ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் பலர் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் வானம் கொட்டட்டும்.
வானம் கொட்டட்டும் - விமர்சனம்
- Critic's Rating
- Avg. Users' Rating
விமர்சனம்
சரத்குமார் ஒரு கொலை வழக்கில் சிறைக்கு சென்று விட அதன் பின்னர் ராதிகா தனியாளாக போராடி குடும்பத்தை காப்பாற்றுகிறார். ராதிகா மகன், மகளை அழைத்துக்கொண்டு பிழைப்பிற்காக வெளியூர் சென்றுவிடுகிறார்.
விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா இருவரும் சண்டைகள், பாசம் நிறைந்த அண்ணன் தங்கையாக வளர, இடையில் இருவருக்கும் ஒரு காதல் பின்னணியும் இருக்கிறது. மறுபக்கம் சுயதொழிலில் விக்ரம் பிரபு இறங்க கடைசியில் அவரின் உயிருக்கும் ஆபத்து பகையாக தொடர்கிறது.
சரத்குமார் கொலை செய்யப்பட்டவரின் மகன் சரத்குமாரை பழி வாங்க காத்துக் கொண்டிருக்கிறார். 16 வருடங்கள் கழித்து வெளிவந்த சரத்குமார் மீண்டும் குடும்பத்துடன் இணைந்தாரா? என்பது தான் மீதி கதை.
சரத்குமார், ராதிகா ஆகியோர் இப்படத்தின் மிக பெரிய பலம். அண்ணனாக, மகனாக விக்ரம் பிரபுக்கு நீண்ட நாட்களுக்கு பின் இந்த படத்தின் மூலம் ஸ்கோர் செய்கிறார்.
சரத்குமார் ஒரு வெள்ளந்தி மனிதராக அப்படியே வாழ்ந்துள்ளார். சரத்குமாருடன் போட்டி போட்டு நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் ராதிகா. சரத்குமார் ஒரு எதார்த்தமான அப்பவாக பிள்ளைகளின் நலனின் அக்கறை கொள்வதும், மனைவியின் மீதான அதட்டலும், கண்டிப்பும், பாசமும் நேர்த்தியாக அமைந்துள்ளது. தென் தமிழ் மண்ணான தேனி மாவட்ட தமிழை அழகாக பேசி ஈர்க்கிறார்.
சாந்தனு – ஐஸ்வர்யா ராஜேஷின் காம்பினேஷன் பக்காவாக அமைந்துள்ளது. குறும்பு நிறைந்த தங்கையாக, மகளாக வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் இயல்பான நடிப்பை பதிவு செய்கிறார். இருவருக்கும் இடையான அண்ணன் தங்கை சண்டை பலரும் ரசிக்கும் ஒன்று.
ராதிகா சரத்குமார் முக பாவனைகளிலே உணர்ச்சிகளை வெளிப்படுத்துகிறார். சரத்குமாருக்கும் இவருக்கும் இடையிலான நீண்ட நாள் பிரிவு, பல நாள் ஏக்கம் எல்லாம் எதார்த்தமாக அமைந்து விட்டது.
வில்லனாக பார்வையாலேயே மிரட்டுகிறார் நந்தா. இயக்குனர் மணிரத்னத்தின் ஸ்டைலை பின்பற்றி காட்சிகளை நிறைவாக்குகிறார் வானம் கொட்டட்டும் படத்தின் இயக்குனர் தனா.
சித் ஸ்ரீராம், கே-வின் பின்னணி இசை பிரமாதம், பாடல்கள் அருமை கண்ணு தங்கம் ராசாத்தி என தொடங்கி, சிங்கம் ராசா என படம் முழுக்க பின்னணி இசையாக பளிச்சிடுகிறார். கதை, வசனத்தை இயக்குனர் மணிரத்னம் மனங்களை கவர்கிறார். ப்ரீத்தா ஜெயராமனின் ஒளிப்பதிவு காட்சிகளை தெளிவாக படமாக்கியுள்ளது.
எதற்காக படம் பார்க்க வேண்டும் ? ராதிகா, சரத்குமாரின் எதார்த்தமான கெமிஸ்டரி ரியலான ஃபீல், ஐஸ்வர்யா, விக்ரம் பிரபுவின் இயல்பான நடிப்பு.
மொத்தத்தில் வானம் கொட்டட்டும் அன்பின் கொண்டாட்டம்.