இத இப்ப ஏன்டா ட்ரெண்டிங் பண்றீங்க? சிம்புவின் வைரல் பேட்டி: நயன்தாரா முத்த புகைப்படம்!
சென்னை: தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக தொடங்கி இன்று முன்னணி ஹீரோவாக உயர்ந்தவர் நடிகர் சிலம்பரசன் (சிம்பு). எப்போதும் சர்ச்சைகள், காதல், கிசுகிசுக்கள் என செய்திகள் சூழ்ந்திருக்கும் அவரின் பழைய ஜெயா டிவி பேட்டி ஒன்று தற்போது இணையத்தில் மீண்டும் வைரலாகி வருகிறது.
அந்த பேட்டியில், “சினிமாவுக்கு நான் எப்படி வந்தேன் எனக்கே தெரியாது. அப்பா எப்போதும் சினிமா பற்றி பேசிக்கொண்டே இருப்பார்; அவருடன் இருந்ததாலேயே நான் நடிகனாக உருவானேன்,” என்று தெரிவித்தார். “அம்மா நன்றாக படிக்கணும் என்பதாலே அப்பாவிடமும் அம்மாவிடமும் நிறைய அடி வாங்கியிருக்கேன். நான் வாங்கின அளவு யாரும் வாங்கிருக்க மாட்டாங்க,” என்றார்.
பெண்களுடன் பேசினாலும் அடி… காதலில் ஏமாற்றப்பட்ட அனுபவம்
சிம்பு கூறியதாவது:
“ஏதாவது பெண்ணுடன் பேசினாலே அம்மா பெல்டால் அடிப்பார்கள். அதனால் படப்பிடிப்பு தளத்திலும் பெண்களுடன் நெருக்கமாக பேசவே மாட்டேன். காதல் எனக்கு ஒரு தூய அனுபவம். காதலுக்காக பல தடவை பிச்சைக்காரன் போல இருந்திருக்கேன். ஆனால், என்னை காதல் ஏமாற்றல, நா காதலிச்சவங்கதான் ஏமாத்திட்டாங்க.”
அவரது கேர்ள்ஃபிரெண்ட்கள் குறித்து எந்த குற்றச்சாட்டையும் கூறவில்லை என்றும், அந்த அனுபவங்களே அவரை வளர்த்ததாகவும் சிம்பு தெரிவித்தார்.
நயன்தாராவுடன் ‘முத்த புகைப்படம்’ லீக் ஆனது எப்படி?
விவாதத்துக்குள்ளான நயன்தாரா–சிம்பு முத்த புகைப்படம் குறித்து அவர் முதன்முறையாக உண்மையை சொன்னார்.
“என்னை பற்றி எதுவும் சொல்லலாம், ஆனா அந்த முத்த போட்டோ லீக் ஆனது எனக்கு வருத்தமா இருந்தது. அப்போது நயன்தாராவையும் என்னையும் முத்தம் கொடுப்பது போல போட்டோ வந்திருக்கு என்ற போது, அது படப் போட்டோ என நினைத்தேன். ஆனால் அது துபாயில் நான் வாங்கிய புதிய கேமராவை டெஸ்ட் பண்ணும் போது கேஷுவலாக எடுக்கப்பட்ட ஒரு பர்சனல் படம். அந்த நிமிடம் வெளியே போனது எனக்கு மிகவும் கஷ்டமா இருந்தது,” என சிம்பு கூறினார்.
“விருப்பம் இல்லாம எந்த பெண்ணையும் தொட்டதில்லை…”
செக்ஸ் கல்வி குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு STR பதிலளித்தபோது:
“செக்ஸ் எஜுகேஷன் குழந்தைகளுக்கு அவசியம். என் பையன் எந்த பெண்ணையும் தவறான நோக்கத்தோட தொட மாட்டான். யாரேனும் தவறாக தட்டினா அது பெற்றோரின் பொறுப்பு. இன்று யாரும் என்னை ப்ளேபாய் என்று சொல்லலாம், பெண்கள் நிறைய இருந்தாங்க என்றும் சொல்லலாம். ஆனால் நான் ஒருபோதும் எந்த பெண்ணையும் விருப்பம் இல்லாமல் தொட்டது இல்லை. இதை நான் சத்தியமா சொல்றேன்,” என்று தெளிவாக கூறினார்.
சிம்புவின் இந்த நேர்மையான பேட்டி தற்போது சமூக வலைதளங்களில் மீண்டும் வைரலாகி வருகிறது.
