பா.ஜ.க. கோழைகள் என்று சித்தார்த் விமர்சனம்; பிரதமருக்கு ட்வீட்!

சமீப காலமாக மத்திய அரசின் செயல்பாடுகள் மற்றும் திட்டங்களையும் அதற்கு துணை போகும் தமிழக அரசையும் விமர்சித்து பேசி வருகிறார் நடிகர் சித்தார்த்.

இந்நிலையில் தம்மை தவறாக சித்தரித்து, விமர்சிப்பதாக, பா.ஜ.க.வினருக்கு நடிகர் சித்தார்த் பதில் கொடுத்துள்ளார்.

சித்தார்த் சமீபத்தில் தனியார் நட்சத்திர விடுதி ஒன்றில் தன் நண்பரின் பிறந்தநாளில் கலந்து கொண்டிருக்கிறார். அப்போது அவர் நண்பர்களுடன் எடுத்து கொண்ட புகைப்படம் ஒன்றை பாஜக ஐடி விங்கை சேர்ந்த ஒருவர் தனது ட்விட்டரில் பகிர்ந்து சித்தார்த் பெண்களுடன் மது அருந்தி உல்லாசமாக இருப்பதாக பதிவிட்டு, அதில் பெண்கள் உடையணிந்திருக்கும் விதம் குறித்தும், போராட்டக்காரர்கள் குறித்தும் கேவலமாக பேசியதாக கூறப்படுகிறது.

இந்த பதிவால் கோபமடைந்த சித்தார்த் அந்த பதிவு குறித்து பிரதமர் மோடியை இணைத்து ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார். ‘பா.ஜ.க. வினர் தங்களுக்கு எதிரானவர்களை இலக்கு வைத்து தாக்குகின்றனர் என்றும், வன்முறைச் செயல்களின் மூலம் தனது உண்மையான முகத்தை பாஜகவினர் வெளிப்படுத்துகின்றனர் என்றும் தெரிவித்துள்ளார்.

நாம் எதை உண்ண வேண்டும், அருந்த வேண்டும், நம் வீட்டுப் பெண்கள் எப்படி உடை உடுத்த வேண்டும் என்பனவற்றை, முறையற்ற விதமாக இந்த பா.ஜ.க. குண்டர்களே தீர்மானிக்க முயல்கின்றனர் என்றும், இதுபோன்ற செயல்களிலிருந்து எனது உறவினர்களையும் நண்பர்களையும் விட்டு விடுங்கள் கோழைகளே… என்றும் நடிகர் சித்தார்த் பதிவிட்டுள்ளார்.



Comments are closed.

https://newstamil.in/