சீறு – விமர்சனம்

ரத்ன சிவா இயக்கத்தில் ஜீவா, ரியா சுமன், வருண் மற்றும் பலர் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் சீறு. ஜீவா கடந்த சில வருடங்களாகவே ஒரு பெரிய ஹிட் கொடுக்க போராடி வருகின்றார்.

சீறு - விமர்சனம்
  • Critic's Rating
  • Avg. Users' Rating
3.3

விமர்சனம்

அந்த வகையில் றெக்க இயக்குனர் ரத்னசிவா இயக்கத்தில் ஜீவா மாஸ் களத்தில் களம் இறங்கியிருக்கும் இந்த சீறு மூலம் மீண்டும் விட்ட இடத்தை பிடித்தாரா? பார்ப்போம்.

ஜீவா தன்னுடைய சொந்த ஊரில் கேபிள் டிவி வைத்து தன் தங்கையுடன் வாழ்ந்து வருகிறார். தங்கை கர்ப்பமாக இருக்க அவரை உள்ளங்கையில் வைத்து தாங்கின்றார்.

இந்நிலையில் ஊரில் எம்.எல் ஏ செய்யும் அட்டூழியங்களை தன் கேபிள் சேனல் மூலம் வெளியுலகத்திற்கு கொண்டு வருகிறார். எம் எல் ஏ ஒரு கட்டத்தில் ஜீவாவை கொல்ல முயற்சி செய்கிறார்.

இதற்காக சென்னையில் மல்லி என்ற வில்லனை அழைத்து வருகிறார் எம்.எல்.ஏ. ஆனால் மல்லி தெரிந்தோ தெரியாமலோ ஜீவாவின் தங்கையின் உயிரை காப்பாற்ற பின் மல்லியை தன்னுடைய நண்பனாகவே பார்க்க தொடங்கி விடுகிறார்.

அவரை தேடி ஜீவா சென்னை வர, பின்னர் மல்லியின் உயிருக்கு ஒரு ஆபத்து ஏற்பட அவரை எப்படி காப்பாற்றுகிறார் என்பது தான் என்பதே அடுத்தடுத்த காட்சிகள்.

ஜீவா நீண்ட இடைவேளைக்கு பிறகு நல்ல துறுதுறுவென சிறப்பாக நடித்துள்ளார், எமோஷன் காட்சிகளில் நம்மையே கலங்க வைக்கிறார். இவர்களின் அண்ணன் தங்கச்சி பாசம் நமக்குள் ஒரு ஏக்கத்தை ஏற்படுத்துகிறது. அதிலும் தன் தங்கையிடம் பாப்பா பாப்பா என்று பேசுகையில் எமோஷ்னல் சீனிலும் திருப்பாச்சி விஜய் போல் ஸ்கோர் செய்கின்றார்

தன் வழக்கமான கலாய் ஸ்டைலிலும், எனக்கே சென்னை லாங்குவேஜா, நீ காமெடி பண்ணா சிரிப்பே வரமாட்டுது மச்சி என்று சதீஷை கலாய்ப்பது என பழைய ஜீவாவின் அதே கலகலப்பு.

வருண் மல்லியாக எதார்த்தமான நடிப்பால் அழகாக ஸ்கோர் செய்கிறார். படம் முழுக்க தாடியுடன் திரியும் இவர் ஒரு காட்சியில் மட்டும் ஒட்டு தாடி வைத்திருப்பது என்னப்பா இப்படி பண்றீங்களே என்ற கேள்வியை எழுப்புகிறது. அவர் இதுவரை நடித்த படங்களிலேயே இது தான் நல்ல அழுத்தமான கதாபாத்திரம் என்று சொல்லி விடலாம்.

ரியா சுமன் சும்மா பெயருக்கு வந்து சென்று விடுகிறார். நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழுக்கு வந்துள்ள நவதீப் அவரின் வேலையை கச்சிதமாக செய்து முடித்துள்ளார்.

ரத்னசிவா மாஸ் காட்சிகளை ஏதோ விஜய், அஜித் படத்திற்கு வைப்பது போல் வைத்து மிரட்டியுள்ளார். ஜீவாவிற்கும் அது செட் ஆகி போகின்றது. அதிலும் ஒரு போன் பூத் காட்சி ஒன்று பொறி பறக்கின்றது.

டி.இம்மானின் இசை படத்திற்கு பெரிய பலம், பாடல்கள் அனைத்தும் ரசிக்கும் ரகம்.

ரத்தின சிவாவின் இயக்கம் சூப்பர். ஹீரோ டு வில்லன் என்றில்லாமல் ஹீரோ Vs வில்லனின் வில்லன் என கொண்டு சென்றிருப்பது வித்தியாசமாக உள்ளது. இன்னமும் எலியும், பூனையுமாம் வில்லனுக்கும், ஜீவாவிற்கும் ஆட்டம் இருந்திருக்க வேண்டாமா ரத்ன சிவா என கேட்க வைக்கின்றது,

இரண்டாம் பாதியில் கொஞ்சம் தடுமாறும் திரைக்கதை கொஞ்சம் சொதப்பல், ஜீவா, வருண் நடிப்பு அதை சரிசெய்து விடுகிறது.

மொத்தத்தில் சீறு கமர்ஷியலாய் சீறியது!

Sending
User Review
3 (1 vote)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *