‘இந்தியன் 2’ விபத்து கிரேன் ஆபரேட்டர் கைது!

SHARE THIS
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

‘இந்தியன் 2’ படப்பிடிப்பு தளத்தில் பிரமாண்ட கிரேன் திடீரென விழுந்தது. இதனால், ப்ரொடக்ஷனில் பணியாற்றிய இயக்குனர் ஷங்கரின் உதவியாளர் மது, உதவி இயக்குனர் கிருஷ்ணா, மற்றும் சண்டை கலைஞர் ஒருவர் என 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்

விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நசரத் பேட்டை போலீசார், கிரேன் ஆபரேட்டர் ராஜன் என்பவர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

அஜாக்கிரதையால் மரணம் விளைவித்தல், அஜாக்கிரதையாக இயந்திரங்களை கையாளுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தலைமறைவாக இருந்த கிரேன் ஆபரேட்டரை போலீசார் கைது செய்தனர். படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து தொடர்பாக லைக்கா, தயாரிப்பு நிர்வாகி, கிரேன் உரிமையாளர், கிரேன் ஆப்ரேட்டர் உள்ளிட்டவர்கள் மீது 4 பிரிவின் கீழ் காவல்துறை வழக்குப்பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Tag: , , , , , , , , , , , , , , , , , , , , ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *