நான் சிரித்தால் – விமர்சனம்

SHARE THIS
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 • 0
 •  
 •  
 •  

இந்த ஜெனரேஷன் பேவரட் இசையமைப்பாளர் என்றால் அது ஹிப்ஹாப் ஆதி தான். இவர் நடிப்பில் நான் சிரித்தால் இன்று ரிலீஸ் ஆகியிருக்கு, ராணா இயக்கத்தில் ஐஸ்வர்யா மேனன் மற்றும் பலர் இணைந்து நடித்து இன்று திரைக்கு வந்துள்ள திரைப்படம் நான் சிரித்தால்.


நான் சிரித்தால் - விமர்சனம்
 • Critic's Rating
 • Avg. Users' Rating
2.8

நான் சிரித்தால் - விமர்சனம்

மீசைய முறுக்கு, நட்பே துணை என இரண்டு ஹிட் படங்களை கொடுத்த இவர் நான் சிரித்தால் மூலம் ஹாட்ரிக் அடித்தாரா வாங்க பார்க்கலாம்.

இடம் பொருள், சூழ்நிலை தெரியாமல் சிரித்து விடும் ஒரு வித சிரிப்பு நோயால் பாதிக்கப்பட்டு இருப்பவர் ஹிப் ஹாப் ஆதி. ஹிப்ஹாப் ஆதி படத்தின் ஆரம்பத்திலேயே வினோத மனிதர்கள் என்ற நிகழ்ச்சியில் கலந்துக்கொள்கின்றார். அதில் தன் வாழ்க்கையில் நடந்த அனுபவத்தை ஒவ்வொன்றாக பகிர்கின்றார்.

எந்த ஒரு சோகமோ, வலியோ எது என்றாலும் உடனே சிரிப்பு வந்துவிடும், ஆதிக்கு இந்த சிரிப்பால் தன் காதலியை இழக்கின்றார், தன் வேலையை இழக்கின்றார். இதனால் அவர் சந்திக்கும் பிரச்சனைகள் இப்படத்தின் கதை.

ஆதியின் நண்பர் டெல்லி பாபு தொலைந்து போக அவரை தன் மற்ற நண்பர்களுடன் இணைந்து தேட ஆரம்பிக்கின்றார், அப்போது அதே ஏரியாவில் இருக்கும் டான் டெல்லி பாபுவை கொலை செய்ய ஒரு கும்பல் திட்டமிடுகின்றனர்.

இந்த திட்டத்தில் தவறுதலாக ஆதி, ரவிகுமார் இருக்கும் இடத்திற்கு செல்ல, பிறகு என்ன ஆனது என்பதே மீதிக்கதை.

ஹிப் ஹாப் ஆதி வழக்கம் போல தன்னுடைய நகைச்சுவை கலந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். அவருக்கு அப்பாவாக வரும் படவா கோபி லோக்கல் அப்பாவாக இறங்கி அடிக்கின்றார். ஐஸ்வர்யா மேனன் உள்ளிட்ட மற்ற நடிகர்கள் அவர்களின் வேலையை சரியாக செய்துள்ளனர்.

அதேபோல் வில்லனாக கே.எஸ்.ரவிக்குமார் மற்றும் ரவிமரியா, இருவருமே காமிக் வில்லன் என்று சொல்லலாம், இதில் ரவிமரியா தான் ஸ்கோர் செய்கின்றார், அதிலும் கிளைமேக்ஸில் அவர் சிலை போல் இருக்கும் காட்சி சிரிப்பிற்கு கேரண்டி.

சில இடங்களில் ஆதி மட்டுமே சிரித்துக்கொண்டு இருக்கின்றார். ரசிகர்களிடமிருந்து பெரியளவில் சிரிப்பு வரவில்லை என்பது தான் கவலை.

இயக்குனர் ராணா கெக்க பெக்க என்ற குறும்படத்தை தழுவி இப்படத்தை இயக்கியுள்ளார். பல இடங்களில் நம்மை சிரிக்க வைக்கிறார். சில இடங்களில் மொக்கையா காமெடி பண்ணாதீங்க என்ற பீலையும் கொடுக்கிறார்.

கிளைமேக்ஸில் இருந்த கலகலப்பு படம் முழுவதும் இருந்திருக்கலாம். படத்த்தின் கான்செப்ட், ஆதி தன்னால் முடிந்த அளவிற்கு நன்றாக நடித்துக்கொடுத்துள்ளார். ரவிகுமார், ரவிமரியா போன்ற நடிகர்களை இன்னமும் பயன்படுத்தியிருக்கலாம்.

மொத்தத்தில் நான் சிரித்தால், சிலர் சிரிப்பார் சிலர் அழுவார்

Sending
User Review
3 (1 vote)
Tag: , , , , , ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *