தேன்மொழி சீரியல் நடிகை காதலரை திருமணம் செய்தார்!
விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியில் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் அஞ்சலி. இவர் விஜய் டிவியில் தேன்மொழி என்ற சீரியலில் நடித்து வருகிறார், இதில் தொகுப்பாளினியாக கலக்கிய ஜாக்குலின் தான் நாயகியாக நடிக்கிறார்.
இந்த சீரியலில் அவருக்கு தங்கையாக நடிக்கிறார் அஞ்சலி. இவருக்கு பதிலாக இப்போது வேறொருவர் அவரது கேரக்டரில் நடிக்கிறார்.
இதுகுறித்து அவர் ஒரு பேட்டியில், தேன்மொழி சீரியலில் எனது கதாபாத்திரம் லவ் டிராக்கில் செல்ல இருந்தது, ஆனால் அதற்கு என் முகம் மெச்சூரிட்யாக இல்லை என்றார்கள் நானும் விலகிவிட்டேன்.
அதன்பிறகு தான் காதலித்தவரை திருமணம் செய்துகொண்டேன். எனது வீட்டில் காதலுக்கு அனுமதி இல்லை எனவே பிரபாவின் அம்மா-அப்பா சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டோம் என கூறியுள்ளார்.
Comments are closed.