மேன் vs வைல்ட் சூட்டிங்கில் காயம்; ரஜினி மறுப்பு!

மேன் vs வைல்ட் நிகழ்ச்சியில் ரஜினிகாந்த்துக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது, டிஸ்கவரி சேனல் தயாரிக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தார் ரஜினிகாந்த் பந்திப்பூர் புலிகள் சரணாலயம் பகுதியில் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிலையில், நிகழ்ச்சியின் அடுத்த சீசனை நேஷனல் ஜியோக்ரபி சேனல் , ‘ரன்னிங் வைல்ட் வித் பியர் கிரில்ஸ்’ என்ற பெயரில் ஒளிப்பரப்ப இருப்பதாக அறிவித்தது, இதற்கான படப்பிடிப்பில், பியர் கிரில்ஸ் உடன் இணைந்து நடிகர் ரஜினி பங்கேற்றுள்ளார்.

இந்நிலையில் படப்பிடிப்பின் போது நடிகர் ரஜினிக்கு தோள்பட்டையில் லேசான காயம் ஏற்பட்டதாகவும், இதையடுத்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. தற்போது அவர் நலமுடன் இருப்பதாகவும் வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆனால் நிகழ்ச்சி படப்பிடிப்பின் போது எந்த காயமும் ஏற்படவில்லை சென்னை விமான நிலையத்தில் ரஜினிகாந்த் பேட்டி.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

https://newstamil.in/