விஜய்யின் 65வது படத்தின் முக்கிய தகவல்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து கொண்டிருக்கும் படம் தான் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் இப்படத்தில் விஜய்யுடன் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, அர்ஜுன் தாஸ், ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், விஜய்யின் அடுத்த படம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. விஜய்யின் 65வது படத்தை சுதா கொங்காரா இயக்க இருப்பதாகவும், சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.

விரைவில் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


1 thought on “விஜய்யின் 65வது படத்தின் முக்கிய தகவல்

 • December 11, 2021 at 4:10 am
  Permalink

  Hey there! I just would like to give you a
  big thumbs up for the excellent info you’ve got
  right here on this post. I’ll be returning to your
  web site for more soon.

  Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *