நாடாளுமன்றத்தில் எதிரொலித்த விஜய்யின் பெயர்!

நாடாளுமன்றத்தில் பட்ஜெட் மீதான விவாதம் இருஅவைகளிலும் தற்போது நடைபெற்று வருகிறது.மக்களவையில் இன்று நடைபெற்ற இந்த விவாதத்தின்போது, நடிகர் விஜய் வீட்டில் நடைபெற்ற ஐடி ரெய்டு விவகாரம் எதிரொலித்தது.

இந்த விவகாரத்தை முன்வைத்து, மக்களவையில் பேசிய தயாநிதிமாறன், “ரஜினிக்குக் கிடைத்த வரிச்சலுகை நடிகர் விஜய்க்கு கிடையாதா?, தமிழகத்தில் தேர்தல் வருவதால் ரஜினிக்கு வரிச்சலுகை அளித்துள்ளது வருமான வரித்துறை. தமிழ், தமிழ் என பேசும் மத்திய அரசு அதன் வளர்ச்சிக்காக எதுவும் செய்யவில்லை. செத்தமொழியான சமஸ்கிருதத்துக்கு மத்திய அரசு கோடிக்கணக்கில் செலவு செய்கிறது” என்றார்.



Comments are closed.

https://newstamil.in/