Thursday, September 10, 2026
ENTERTAINMENT

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சித்ராவை நெகிழ வைத்த ரசிகை – வீடியோ

சின்னத்திரையில் தொகுப்பாளினியாக இருந்து நடிகையாக வலம் வருபவர் சித்ரா. இவர் தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற சீரியலில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இத்தொடரில் குமரன், கதிர் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கதிர் – முல்லை கதாபாத்திரத்துக்கு ரசிகர்களும் ஏராளம்.

தினமும் அவர்களை பார்ப்பதால் தன் குடும்பத்தில் ஒருவராகவே கருதி விடுவார்கள். அப்படி முதலில் தொகுப்பாளினி, பின் நடிகை, நடனம் என பல விஷயங்களில் தனது திறமையை வெளிக்காட்டி வருபவர் சித்ரா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் இருவருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளதாகவும், விரைவில் இருவரில் ஒருவர் அத்தொடரை விட்டு வெளியேறுவர் என்றும் தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், தனக்கு தற்போது அத்தொடரை விட்டு விலகும் ஐடியா இல்லை என்று கூறி சித்ரா மறுத்துள்ளார்.

இந்நிலையில் சித்ராவுக்கு முல்லை அட்டிட் என்ற ரசிகை நிறைய பரிசு பொருளுடன் அவரை சந்தித்துள்ளார், இந்த வீடியோவை இணையத்தில் அவர் பகிர்ந்துள்ளார்


Comments are closed.