ஆமாம்! நான் வெட்கப்படவில்லை; நான் செய்திருக்கேன்: ஸ்ருதிஹாசன்
நடிகர் கமல்ஹாசனின் மூத்த வாரிசு நடிகை ஸ்ருதிஹாசன். ஒரு நாள் முன்பு, நடிகையும் பாடகியுமான ஸ்ருதிஹாசன் தனது இன்ஸ்டாகிராமில் இரண்டு படங்களின் ஒரு படத்தொகுப்பைப் பகிர்ந்து கொண்டார். அவர் உடல் ஷேமிங் மற்றும் அவரது பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை பற்றி ஒரு நீண்ட பதிவை எழுதினார். இந்நிலையில் தான் முகத்தில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்ததை சிலர் கிண்டல் செய்து வருகின்றனர்.
இதுப்பற்றி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள ஸ்ருதிஹாசன், எனது என்னுடைய முந்தைய பதிவை தொடர்ந்து தற்போது இந்த பதிவை பதிவிட முடிவெடுத்தேன். ஏன் என்று கூறுகிறேன். என்னைப் பற்றி பிறர் கூறும் கருத்துகள் மூலம் என் வாழ்க்கையை நான் நடத்துபவரல்ல. ஆனால், தொடர்ந்து அவள் குண்டாக இருக்கிறாள், ஒல்லியாக இருக்கிறாள் என்ற கருத்துகள் தவிர்க்கப்பட வேண்டியவை. இந்த படங்கள் 3 நாட்களுக்கு முன்பு எடுக்கப்பட்டது.
நீண்டகாலமாகவே மனதளவிலும், உடல் அளவிலும் ஹார்மோன்களுடன் நல்ல உறவினை மேற்கொள்ள முயற்சிக்கிறேன். அது சுலபமானதல்ல. என்னுடைய வலிகள் எளிதானதல்ல, என்னுடைய உடல் மாற்றங்கள் எளிதானதல்ல. ஆனால், என்னுடைய பயணத்தை பகிர்வது எனக்கு எளிதாக இருக்கிறது. பிரபலமாக இருந்தாலும் சரி… பிரபலமாக இல்லையென்றாலும் சரி
இதுதான் என் வாழ்க்கை. இதுதான் என் முகம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறேன்.
ஆம்! நான் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டேன். இதனை ஒப்புக்கொள்வதில் எனக்கு எந்த வெட்கமும் இல்லை. நான் இதனை விளம்பரப்படுத்துகிறேனா? இல்லை, நான் அதற்கு எதிரானவரா இல்லை. இப்படிப்பட்ட வாழ்வதைத்தான் நான் தேர்ந்தெடுத்துள்ளேன். நமக்கு நாமே செய்துகொள்ளக் கூடிய சாதகம் என்னவெனில் நம் உடல், மனம் ஆகியவற்றின் இயக்கத்தையும் மாற்றங்களையும் ஏற்றுக்கொள்ள கற்றுக் கொள்வதே, அன்பைப் பரப்புங்கள்.
என்னை இன்னும் கொஞ்சம் அதிகமாக நேசிக்க நான் தினமும் கற்றுக் கொண்டிருக்கிறேன். ஏனென்றால் என் வாழ்வில் மிகப்பெரிய காதல் கதை உள்ளது. உங்களிடமும் தான் என நம்புகிறேன்.