பிக் பாஸ் முகென் ராவ் தந்தை மரணம்
பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் அனைவர் மனதிலும் தனி இடம் பிடித்தவர் முகென் ராவ். தன்னுடைய திறமையாலும், விடாமுயற்சியாலும் பிக் பாஸ் வீட்டில் சிறப்பாக விளையாடி வந்த முகென், பிக்பாஸ் சீசன் 3ன் டைட்டில் வெல்ல மாட்டார் என்கிற நம்பிக்கையை மாற்றியவர் முகென் ராவ்.
இவரின் சிறு வயதிலேயே இவரது தாய் மற்றும் தந்தை பிறிந்து வாழ்ந்ததாக கூறினார். இருப்பினும் முகின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தனது குடும்பத்தை பற்றியும், தினமும் அப்பா அம்மா சண்டை போடுவார்கள் அதனால் நான் தற்கொலை முயற்சி செய்துள்ளேன் என்றும் உருக்கமாக பேசியிருந்தார். அதன் பின்னர் ஒருமுறை முகின் அப்பா வீடியோ காலில் பேசி அவருக்கு ஆறுதல் கூறினார் என்பதெல்லாம் எல்லாரும் அறிந்த ஒன்றுதான்.
மேலும் வீட்டிற்குள் இருக்கும் போழுது இவரது தந்தை வீடியோ மூலமாக முகன் அவர்களிடம் பேசியதை நாம் பார்த்தோம்.
இந்நிலையில் நேற்று மாலை 52 வயதான இவரின் தந்தை பிராகேஷ் ராவ் தீடிரென நெஞ்சு வலி ஏற்பட்டதால் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் சிகிச்சை பலனின்றி உயிர் இளந்துளார் பிராகேஷ்.