Sunday, September 13, 2026
ENTERTAINMENT

குட்டி ஸ்டோரி பாடலை பாராட்டிய ஹாலிவுட் பிரபலம்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் மாஸ்டர். இந்தப் படத்தில் கல்லூரி பேராசிரியர் கேரக்டரில் நடிக்கும் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனனும், வில்லனாக விஜய் சேதுபதியும்

மாஸ்டர் படத்தின் குட்டி ஸ்டோரி பாடல் தற்போது பெரிய ஹிட்ஆகியுள்ளது. ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கும் இந்தப் பாடல் யூடியூப் அதிக பார்வைகளைப் பெற்று யூடியூபில் அதிக பார்வைகளைப் பெற்று வருகிறது. தற்போது வரை 21 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை குவித்துள்ளது அந்த வீடியோ.

விஜய் தன் சொந்த குரலில் பாடியுள்ள இந்த பாடலை தற்போது ஹாலிவுட் நடிகர் மற்றும் இயக்குனரான பில் டியூக் என்பவர் பாராட்டியுள்ளனர்.

இந்தப் பாடல் குறித்து ட்வீட் செய்திருக்கும் ஹாலிவுட் இயக்குநர் பில் டியூக், சிறப்பான இசை வீடியோ என்று கூறி இயக்குநர் லோகேஷ் கனகராஜ், இசையமைப்பாளர் அனிருத், பாடலாசிரியர் அருண்ராஜா காமராஜ் ஆகியோரை டேக் செய்துள்ளார்.