ஒற்றுமையுடன் தேர்தல் பணியாற்ற வேண்டும்: ஓபிஎஸ் – இ.பி.எஸ்.,

அ.தி.மு.க.,நிர்வாகிகள் கூட்டம் கட்சி அலுவலகத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் தலைமையில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அமைச்சர்கள் மாவட்ட செயலாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அதன் பின்னர் இருவரும் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது: எத்தனை ற்றாண்டு வந்தாலும் மக்களுக்காக அதிமுக தொடர்ந்து இயங்கும் என ஜெயலலிதா கூறி உள்ளார். ஜெயலலிதாவின் கனவை நனவாக்கும் வகையில் ஒற்றுமையுடன் இருந்து தேர்தலில் வெற்றிபெற பணியாற்ற வேண்டும். அதிமுகவின் சாதனைகளை பிரசாரம் மற்றும் துண்டு பிரசுரம் மூலமாக மக்களை சென்றடையச்செய்ய வேண்டும். அதிமுகவினர் ஒற்றுமையுடன் தேர்தல் பணியாற்றி வெற்றியை உறுதி செய்ய வேண்டும்.



Comments are closed.

https://newstamil.in/