ஆனந்தராஜின் தம்பிக்கு நடந்த சோகம்!

பிரபல வில்லன் நடிகர் ஆனந்தராஜ் புதுவையை சேர்ந்தவர் ஆவார். இவருடைய வீடு புதுவை அண்ணா சாலையையொட்டி உள்ள திருமுடி நகரில் உள்ளது.

சகோதரர்களில் ஒருவரான கனகசபையின் (55), வீடு அண்ணா சாலையொட்டி திருமுடிநகரில் உள்ளது. வட்டிக்கு பணம் தருவது மற்றும் ஏலச்சீட்டு நடத்தி வந்த கனகசபை திருமணம் செய்து கொள்ளாமல் தனியாக வசித்து வந்தார்.

நடிகர் ஆனந்தராஜுக்கு 5 தம்பிகள், 2 தங்கைகள் உண்டு. இவர்களில் கடைசி தம்பி கனகசபை. இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. தனி வீட்டில் வசித்து வந்தார். இவர், வட்டிக்கு பணம் கொடுப்பது மற்றும் ஏலச்சீட்டு நடத்தி வந்துள்ளார்.

இந்நிலையில் படுக்கையறைக்கு படுக்க சென்ற அவர் நீண்ட நேரமாகியும் கதவு திறக்கவில்லை. இந்நிலையில் சந்தேகமடைந்த குடும்பத்தினர் கதவை திறந்துபார்த்தபோது அவர் அறையில் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் கனகசபையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில் கனகசபை ஏலச்சீட்டு நடத்தி வந்ததும் அதில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாகவே கடன் பிரச்சனை ஏற்பட்டு, மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டதும் தெரியவந்தது. இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


77 thoughts on “ஆனந்தராஜின் தம்பிக்கு நடந்த சோகம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

https://newstamil.in/