கொரோனா நிதி உதவி அளித்த காஜல் அகர்வால்!

SHARE THIS
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

காஜல் அகர்வால் தமிழ் திரையுலகில் மிகவும் பரபரப்பான நடிகைகளில் ஒருவர், அவர் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் பணியாற்றி வருகிறார். சமீபத்தில், ‘இந்தியன் 2’ படத்தின் செட்டில் ஒரு கடுமையான விபத்தில் இருந்து நடிகை தப்பினார். இது 3 பேரைக் கொன்றது.

இந்நிலையில், கொரோனா ஊரடங்கள் வேலை இழந்த தெலுங்கு சினிமா தொழிலாளர்களுக்கு உதவ 2 லட்சம் ரூபாயை வழங்கியுள்ளார் காஜல் அகர்வால்.

தெலுங்கு சினிமா நட்சத்திரங்கள் பலரும் இதற்கு நிதி உதவி அளித்து வருகின்றனர். நடிகர்கள் பலரும் உதவி செய்த் நிலையில் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் நடிகைகள் யாரும் பணம் கொடுக்க ஏன் முன்வரவில்லை என பிரபல காமெடியன் பிரம்மாஜி கோபத்துடன் பேசியிருந்தார். இதனால் நெட்டிசன்களும் சமூக வலைத்தளங்களில் நடிகைகளை விமர்சித்தனர்.

இந்நிலையில் நடிகை காஜல் அகர்வால் தனது பங்கிற்கு Corona Crisis Charityக்கு 2 லட்சம் ருபாய் தற்போது வழங்கியுள்ளார்.

காஜல் அகர்வால், பிருந்தா இயக்கவுள்ள ‘ஹே சினாமிகா’ படத்திற்கான படப்பிடிப்பைத் தொடங்கினார், துல்கர் சல்மான் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஆனால் அரசாங்கம் விதித்த கொரோனா வைரஸ் ஊரடங்கால் படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.


Tag: , , , , , , ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *