சைப் அலி கானின் மகளை முத்தம் கொடுக்க வந்த ரசிகர் – வைரலாகும் வீடியோ
பிரபல நடிகை ஒருவர் ஜிம்மில் இருந்து வெளியே வந்தபோது அவருடைய கையைப் பிடித்து ரசிகர் ஒருவர் முத்தம் கொடுத்த போது அதனை கண்டுகொள்ளாமல் புன்சிரிப்புடன் அந்த நடிகை நடந்து சென்றது அனைவரையும் ஆச்சரியத்தை அளித்துள்ளது
பிரபல பாலிவுட் நடிகர் சைப் அலி கானின் மகள் தான் சாரா அலி கான். இவர் தற்போது பாலிவுட்டில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக உள்ளார்.
இவர் நடித்து பாலிவுட்டில் வெளியான, கேதர்நாத் மற்றும் சிம்பா போன்ற படங்கள் மெஹா ஹிட்டை கொடுத்தது. தற்போது சாரா அலிகானின் நடிப்பில் கூலி நம்பர் 1 என்ற படம் வெளியாக உள்ளது.
இந்த நிலையில் சாரா அலிகான் ஜிம்மில் உடற்பயிற்சி செய்துவிட்டு வெளியே வந்தபோது அவருடன் செல்பி எடுக்க சில ரசிகர்கள் அனுமதி கேட்டனர். அதனை அடுத்து அவர் ரசிகர்களுக்கு புன்சிரிப்புடன் செல்பிக்கு போஸ் கொடுத்துக் கொண்டிருந்தார்.
அப்போது ஒரு ரசிகர் திடீரென சாரா அலிகான் கையை பிடித்து முத்தம் கொடுத்தார். இதனை பார்த்த அவருடைய பாதுகாவலர் ஒருவர் உடனடியாக அந்த ரசிகரை தள்ளிவிட்டார்.