வில்சன் கொலை திட்டமிட்டு நடத்தப்பட்டது – கேரள போலீஸ்!
சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் கொலை திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டதாக கேரள போலீஸார் தகவல் தெரிவித்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் தமிழக கேரள எல்லைப் பகுதியான களியக்காவிளை சோதனை சாவடியில் சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சனை சுட்டு மற்றும் கத்தியால் குத்திக் படுகொலை செய்த சம்பவம் தொடர்பாக தவுபீக் , அப்துல்சமீம் ஆகியோரை கண்காணிப்பு கேமரா பதிவுகளின் அடிப்படையில் புகைபடத்தை வெளியிட்டு தேடி வருகின்றனர்
இந்நிலையில் இருவரும் கேரளாவில் கொலைக்காக திட்டமிட்டனர் என்று கேரள போலீஸார் தெரிவித்துள்ளனர். கொலை நடந்த அன்று கேரளாவில் பொது வேலைநிறுத்தம் என்பதால் வாகனங்கள் ஓடவில்லை.
எனவே இரவு எட்டு மணியளவில் நெய்யாற்றங்கரையில் ஒரு ஆட்டோ ஓட்டுநரிடம் அதிக பணம் கொடுப்பதாகக் கூறி வாடகைக்கு ஆட்டோவைப் பிடித்து வந்துள்ளனர். நெய்யாற்றங்கரை பகுதியில் இருந்து கொலை நடந்த ஒரு மணி நேரத்திற்கு முன்பு நடமாடிய வீடியோ போலீசாரிடம் கிடைத்து உள்ளது .
அங்கு இருந்து ஆட்டோவில் வந்து கொலை செய்து விட்டு தப்பி சென்று உள்ளனர். இரவு 9.45 மணிக்கு இந்த கொலைச் சம்பவம் நடைபெற்றுள்ளது. இரண்டு நாட்கள் அவர்கள் நெய்யாற்றங்கரையில் வசித்து உள்ளனர். அந்த பகுதியில் உள்ள பள்ளிவாசலுக்கு அடிக்கடி சென்று வந்தும் உள்ளனர்.
இவர்கள் கொலை செய்ய ஆட்டோவில் ஏறிய நேரத்தில் கையில் இருந்த கை பை அதன் பிறகு காணவில்லை . அந்த பையில் என்ன இருந்தது அந்த பை யாருக்கு கை மாற்றப்பட்டது.
அன்றைய தினம் முழு அடைப்பு என்பதால் ஆட்டோவுக்கு 400 ரூபாய் வாடகை கொடுத்து உள்ளனர். அந்த ஆட்டோ ஓட்டுனரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வில்சன் மனைவி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “என் கணவரை இழந்து வாடும் எங்களுக்கு ஆறுதல் கூறியதுடன் முதலமைச்சர் ஒரு கோடி ரூபாய் நிதியுதவி வழங்கினார். எனது மூத்த மகளுக்கு அரசு வேலை வழங்குவதாக கூறியுள்ளார். இது போன்ற கொடுமை வேறு எந்த போலீஸாருக்கும் நடைபெறக் கூடாது. குற்றாவாளிகளைப் பிடித்து தக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளனர்” என்று கூறினார்.