ரஜினியை ஓரம்கட்டிய தனுஷ்
தனுஷ் கதாநாயகனாக நடித்துள்ள படம், ‘பட்டாஸ்.’ இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக சினேகா, மெஹ்ரின் ஆகிய இருவரும் நடித்து இருக்கிறார்கள். துரை செந்தில்குமார் டைரக்டு செய்துள்ளார். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்து இருக்கிறது. படம், பொங்கல் விருந்தாக திரைக்கு வருகிறது.
அசுரன் அசுரத்தனமாக ஹிட்டடித்து, எனை நோக்கி பாயும் தோட்டா செம்ம ஃபெயிலடித்து இதோ இப்போது பட்டாஸ் படம் ரிலீஸுக்கு ரெடியாகிவிட்டது தனுஷுக்கு.
தர்பார் படத்துடன் போட்டியிட வேண்டாம் என்று நினைத்தார் தனுஷ். ஆனால் தர்பார் படம் பற்றிய ரிவியூ மற்றும் வசூல் டல்லாக இருப்பதால், தியேட்டர்களில் தர்பார் வசூல் படுமோசமானதைத் தொடர்ந்து ரஜினியின் மருமகனார் தனுஷ் 16ம் தேதி ரிலீஸ் செய்வதாக இருந்த தன்னுடைய ‘பட்டாஸ்’ படத்தை ஒருநாள் முன்னதாக 15ம் தேதியே ரிலீஸ் செய்கிறார். இதனால் தனுஷ் மீது செம கடுப்பில் இருக்கிறாராம் ரஜினி.
தர்பார் படத்திற்கு இருவேறு விதமான விமர்சனங்கள் வந்ததாலும், படத்தைத் தவறான ஒரு தேதியில் வெளியிட்டதாலும் எதிர்பார்த்த அளவு வசூல்லை என்கிறார்கள். முதல் நாள் வசூலைத் தவிர அடுத்த இரண்டு நாட்களில் வசூல் இறங்கியுள்ளது. நேற்று ஞாயிறன்று வசூல் கூடியுள்ளது. இன்றும் நாளையும் எதிர்பார்த்த அளவில் இருக்க வாய்ப்பில்லையாம்.
பொங்கல் விடுமுறைதான் தர்பார் படத்தை லாபத்திற்குக் கொண்டு செல்ல வேண்டிய நிலைமை உள்ளது. இருப்பினும் படம் காப்பாற்றிவிடும் என்று நம்பிக்கையில்தான் திரையிட்டர்கள் இருக்கிறார்கள்.
Comments are closed.