‘மதிப்பெண்ணில் திருப்தி இல்லாத மாணவர்களுக்கு தேர்வு’
தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி வெளியிட்டார்.
தமிழகத்தில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்து 16ஆயிரத்து 473 ஆக உள்ளது. இதில் 30600 பேர் 550 – 600 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர். பொதுத்தேர்வில் 600 மதிப்பெண்கள் எடுத்த மாணவர்கள் யாரும் இல்லை. பள்ளிக்கு வராத 1,656 மாணவர்கள் தேர்வு எழுதாதவர்களாக கருதப்படுகின்றனர். அவர்களுக்கு தேர்ச்சி கிடையாது.
மதிப்பெண்களில் திருப்தி இல்லாத மாணவர்களுக்கு செப்டம்பர் அல்லது அக்டோபரில் தேர்வு நடத்தப்படும்.
Comments are closed.