அமெரிக்க அதிபர் டிரம்ப் 2 நாள் பயணமாக இன்று இந்தியா வருகை

இந்தியாவில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் செய்வதற்காக இன்று ஆமதாபாத் வரும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை, விமான நிலையத்தில் பிரதமர் மோடி வரவேற்கிறார். டிரம்பின் வருகையை யொட்டி வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

டிரம்ப் வருகைக்காக ஆமதா பாத் நகரமே விழாக்கோலம் கொண்டுள்ளது. எங்கு பார்த்தாலும் வரவேற்பு தட்டிகள், சுவரோவியங்கள், அலங்கார வளைவுகள் காணப்படுகின்றன.

பிப்ரவரி 24:

காலை, 11:40 மணி: டிரம்ப், மனைவி மெலனியா, ஆமதாபாத் விமான நிலையம் வருகை. பிரதமர் மோடி வரவேற்கிறார்.

பகல், 12:15 மணி: காந்தியின் சபர்மதி ஆசிரமம் செல்கின்றனர். காந்திக்கு டிரம்ப் அஞ்சலி செலுத்துகிறார்.

1:05 மணி: கடந்தாண்டு அமெரிக்காவில் நடந்த, ‘ஹவுடி மோடி’ நிகழ்ச்சி போல, குஜராத் அரசு சார்பில் உலகின் பெரிய ஆமதாபாத் கிரிக்கெட் மைதானத்தில், ‘நமஸ்தே டிரம்ப்’ நிகழ்ச்சி நடக்கிறது.

3:30 மணி: தாஜ்மஹாலை காண டிரம்ப் – மெலனியா, ஆக்ரா செல்கின்றனர்.

இரவு, 7:30 மணி : டில்லி ஐ.டி.சி., மயூரா ஓட்டலில் தங்குகின்றனர்.

பிப்ரவரி 25:

காலை, 10:00 மணி: டில்லி ராஷ்டிரபதி பவனில், டிரம்புக்கு வரவேற்பு.

10:30 மணி: ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில், டிரம்ப் அஞ்சலி செலுத்துகிறார்.

11:00 மணி: டில்லியில் உள்ள ஐதராபாத் ஹவுசில், பாதுகாப்பு, வர்த்தகம், பயங்கரவாத தடுப்பு உட்பட பல துறைகளில், இந்திய – அமெரிக்க உறவு குறித்து, பிரதமர் மோடி – அதிபர் டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.

பகல், 12:40 மணி : ஒப்பந்தங்கள் பரிமாற்றம், செய்தி வெளியீடு

இரவு, 7:30 மணி: இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்திக்கிறார் டிரம்ப்.

இரவு, 10:00 மணி: டில்லி விமான நிலையத்தில் இருந்து அமெரிக்கா புறப்படுகிறார் டிரம்ப்.



Comments are closed.

https://newstamil.in/