துக்ளக் விழா பேச்சு: பெரியார் குறித்து சர்ச்சை பேச்சு; ரஜினிகாந்த் மீதான வழக்கு தள்ளுபடி!

துக்ளக் ஆண்டு விழாவில் பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக நடிகர் ரஜினிகாந்த மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கைத் தள்ளுபடி செய்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டது

சமீபத்தில் துக்ளக் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய ரஜினிகாந்த், கடந்த 1971 ஆம் ஆண்டு பெரியார் தலைமையில் ராமன், சீதை சிலை நிர்வாணமாக எடுத்துச் செல்லப்பட்டது என்றும் அதற்குச் செருப்பு மாலை அணிவிக்கப்பட்டது என்றும் கூறினார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு பெரும்பாலான கட்சிகள் கண்டனம் தெரிவித்தனர். அதுமட்டுமில்லாமல், திராவிட கழகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க எண்ணிய ரஜினிகாந்த், நான் கற்பனையாக எதுவும் கூறவில்லை. அவுட்லுக் பத்திரிகையில் வெளியானதை தான் சொன்னேன். இதற்காக நான் வருத்தம் தெரிவிக்கவோ, மன்னிப்பு கேட்கவோ முடியாது என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

இதற்குக் கண்டனம் தெரிவித்த திராவிடர் விடுதலை கழகம், ரஜினிகாந்த் மீது எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கில், பெரியார் பற்றி சர்ச்சையாகப் பேசியதற்காக அவர் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று கோரப்பட்டது.

அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், இன்று தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவித்தது. அதன் படி, இன்று விசாரணைக்கு வந்த அந்த வழக்கை நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.



Comments are closed.

https://newstamil.in/