மத்திய அரசின் புத்தாண்டு பரிசு – நள்ளிரவு முதல் ரயில்வே கட்டணம் உயர்வு!

ரயில் கட்டணம், திடீரென உயர்த்தப்பட்டது. நள்ளிரவு முதல், இந்த கட்டண உயர்வு அமலுக்கு வரும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பயணிகள் மற்றும் சரக்குக் கட்டணங்களைப் பகுப்பாய்வு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளது என்று ரயில்வே வாரியத் தலைவர் வி.கே.யாதவ் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தெரிவித்தார். அதனையடுத்து, ரயில்வே கட்டணம் உயர்த்தப்படும் என்ற சமிஞ்சை தெரிந்தது.

இந்தநிலையில், இந்திய ரயில்வே கட்டண உயர்வு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, புறநகர் ரயில்களுக்கு கட்டண உயர்வு இல்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

train ticket fare

ஏசி இல்லாத பேசஞ்சர் ரயில்களுக்கு கிலோ மீட்டருக்கு 1 பைசா அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேபோல, விரைவு ரயில்களுக்கு(Mail/Express) ரயில்களுக்கு இரண்டாம் வகுப்பு, படுக்கை வசதி (Sleeper class), முதல் வகுப்பு ஆகிய குளிர்சாதன வசதி இல்லாத பெட்டிகளுக்கு ஒரு கிலோ மீட்டருக்கு 2 பைசா அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேபோல, அனைத்து வகை ஏ.சி வகுப்புகளுக்கும் கிலோ மீட்டருக்கு 4 பைசா அதிகரிக்கப்பட்டுள்ளது

ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகளுக்கு இந்த கட்டண உயர்வு பொருந்தாது. இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு, நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.



Comments are closed.

https://newstamil.in/