வி1 விமர்சனம்

வெற்றி பெற்ற இயக்குனர்களின் உதவியாளர்கள் சிலர் நல்ல கதைகளோடு புதிய இயக்குனர்களாக களத்தில் அறிமுகமாகிறார்கள். அதில் ஒருவராக பாவல் நவகீதன். இவர் இயக்கியிருக்கும் படம் தான் V1, இந்த படத்தின் விமர்சனத்தை பார்க்கலாம்

அருண் காஸ்ட்ரோ நிக்டோபோபியா என்னும் வித்தியாசமான நோயால் பாதிக்கப்பட்டவர். அதாவது இருளில் அவரால் இருக்க முடியாது. மனைவியை இழந்த சோகத்தில் போலீஸ் பணியில் இருந்து விலகி தடயவியல் துறையில் வகுப்பு எடுத்து வருகிறார்.

லிஜேஷின் மனைவியாக சீரியல் நடிகை காயத்திரி. இதில் இருவருக்கும் சண்டை சச்சரவு. வேலைக்கு சென்று இரவில் வீட்டிற்கு திரும்பிய போது காயத்திரி பிணமாக கிடக்கிறார் கொலை வழக்கில் குற்றவாளிகளை நெருங்க முடியாமல் காவல்துறை தவிக்கிறது.

மிகவும் சவாலாக இருக்கும் இந்த வழக்கில் குற்றவாளியை கண்டுபிடிக்க நண்பர் ராமின் உதவியை நாடுகிறார். அவர் இந்த வேலையே எனக்கு வேண்டாம் என தூக்கி போட திடுக்கிட வைக்கும் வகையில் Vl வழக்கை மீண்டும் கையில் எடுக்கிறார். விசாரணையை அவர் ஸ்மார்டாக தொடங்க அடுத்தடுத்த துப்பு கிடைக்கிறது. இதில் காயத்திரி மரணத்தின் பின்னணி என்ன? ராம் தன் வாழ்க்கையில் இழந்தது என்ன என்பதே இந்த V1.

விசாரணை அதிகாரி கதாபாத்திரத்துக்கு ராம் அருண் காஸ்ட்ரோ கச்சிதமாக பொருந்துகிறார். உளவியல் ரீதியாக விசாரணை செய்யும்போது அவரது நடிப்பில் பக்குவம் தெரிகிறது. முதல் படத்திலேயே இயல்பாக நடித்து படத்தை சுவாரசியமாக்குகிறார். நல்ல எதிர்காலம் இருக்கிறது. அருணின் புலனாய்வுக்கு மட்டுமல்லாது படத்தின் நகர்வுக்கும் விஷ்ணுபிரியா பக்கபலமாக இருக்கிறார். ஆக்‌ஷன், துரத்தல் காட்சிகளிலும் தனது சிறந்த பங்களிப்பை கொடுத்திருக்கிறார்.

விஷ்ணு பிரியாவின் அழகாக பேச்சினாலும், மிரட்டலாக பேசினாலும் மலையாள சாயலில் நன்றாக தெரிகிறது. ராமுடன் அவர் சக அதிகாரி போல இல்லாமல் நண்பராக அணுகும் விதம் படம் பார்க்கும் போது பலருக்கும் இவர் அவரின் காதலியோ என தோன்றலாம்.

மற்ற பாத்திரங்களான காயத்ரி, லிஜீஷ், மைம் கோபி, லிங்கா என அனைவருமே தங்களது நேர்த்தியான நடிப்பால் அந்தந்த கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுத்துள்ளனர்.

இயக்குனர் வெற்றி மாறனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய பாவல் நவகீதன் ஆக்‌ஷன் கதையோடு அதிரடி காட்டுகிறார். முயற்சிக்கு நன்றி. முதல் பாதி வேகமாக போனாலும் 2 ம் பாதியில் கொஞ்சம் தளர்வு.

டிஎஸ்.கிருஷ்ணகுமாரின் ஒளிப்பதிவில் குற்றங்களின் இருளும் விசாரணையின் வெளிச்சமும் நம்மை ஆட்கொள்கிறது. ரோனி ரெபெலின் பின்னணி இசை படத்துக்கு வேகம் கொடுக்கிறது. சிஎஸ்.பிரேம் குமாரின் படத்தொகுப்பு விசாரணையை கண்முன் கொண்டு வருகிறது. கடைசி வரை செல்லும் குற்றவாளி யார் என்னும் மர்மம் படத்திற்கு பிளஸ்.

மொத்தத்தில் ‘வி1’ விறுவிறுப்பு குறையாத ஆக்‌ஷன் த்ரில்லர்



Comments are closed.

https://newstamil.in/