தமிழகத்தில் ஊரடங்கு முடிந்த பிறகு என்ன நடக்கும்??
சர்வதேச நாடுகளில், ‘கோவிட் – 19’ என்ற, கொரோனா வைரஸ், ஏராளமான உயிர்களை காவு வாங்கி வருகிறது. வல்லரசு நாடான அமெரிக்காவையே ஆட்டிப் படைக்கிறது.
கொரோனா கொலை வெறி நடத்தி வரும் இக்காலம், மக்களுக்கு சோகம், மனஅழுத்தம், குழப்பம், வீண் கோபம், இயலாமை அதிகரிப்பு என, நெருக்கடியான நிலையை ஏற்படுத்தி விட்டது.
இந்நிலையில் ஏப்ரல் 14ம் தேதிக்கு பிறகு ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுமா என்ற ஐயம் மக்களின் மனதில் தற்போது எழுந்துள்ளது. தமிழகத்தில் தற்போது தான் நாளுக்கு நாள் இந்த வைரஸ் தாக்குதலினால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இந்தியாவிலேயே தமிழகம் அதிகமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையில் 2-வது இடத்தை பிடித்துள்ளது. மக்கள் இந்த ஊரடங்கு உத்தரவு பின்பற்றாமல் இருப்பது அரசுக்கு பெரும் பிரச்சனையாக அமைந்துள்ளது.
சீனா உண்மையை மறைக்கிறது : அமெரிக்க சிஐஏ தகவல்
சிலர் தங்களின் பயண வரலாற்றை அதிகாரிகளுக்கு தெரிவிக்காமல் அமைதி காப்பதாக புகார் எழுந்துள்ளது. இதனால், அவர்களுடன் தொடர்பில் இருப்பவர்களுக்கும் கொரோனா தொற்றும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதனால் இந்த ஊரடங்கு உத்தரவை நீட்டிக்கப்படுவதற்கு வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது. அதன்படி 14ம் தேதிக்கு பிறகும் தமிழக மக்கள் ஊரடங்கு சந்திக்க நேரிடும் என்று தெரியவருகிறது.
மேலும் அதன் பிறகும் மக்கள் தங்களை தனிமைப்படுத்தி கொள்வது நல்லது என்று கூறப்படுகிறது.
Comments are closed.