சீனா உண்மையை மறைக்கிறது : அமெரிக்க சிஐஏ தகவல்

சி.ஐ.ஏ. தற்போதைய மற்றும் முன்னாள் உளவுத்துறை அதிகாரிகளின் கூற்றுப்படி, சீனா தனது கொரோனா வைரஸ் தொற்றுநோய்களைக் குறைத்து மதிப்பிட்டுள்ளது என்றும், வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கான முன்கணிப்பு மாதிரிகளை அமெரிக்கா தொகுத்து வருவதால் அதன் எண்ணிக்கையை நம்ப முடியாது என்றும் பிப்ரவரி தொடக்கத்தில் இருந்தே வெள்ளை மாளிகைக்கு எச்சரிக்கை விடுத்து வருகிறது.

சீனாவின் வூகான் நகரில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸால் அந்நாட்டில் மொத்தம் 81 ஆயிரத்து 369 பேர் பாதிக்கப்பட்டதாகவும், அதில் 3 ஆயிரத்து 326 பேர் உயிரிழந்து விட்டதாகவும் அந்நாட்டு அரசு அதிகார பூர்வமாக தெரிவித்துள்ளது.

பாதிக்கப்பட்டவர்களில் 76 ஆயிரத்து 558 பேர் சிகிச்சைக்குப் பின் குணமடைந்துள்ளதாகவும், 1,588 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் அந்நா்ட்டு அரசு மேலும் தெரிவித்துள்ளது.

இது குறித்து அமெரிக்க மத்திய புலனாய்வுத்துறை, சிஐஏ,வெளியிட்ட அறிக்கையில் இது குறைவான மதிப்பீடு என்றும், உண்மையான புள்ளிவிவரங்களை சீன அரசு மறைப்பதாகவும் தெரிவித்துள்ளது.

வூகானில் மட்டும் 5,000 பேர் உயிரிழந்திருக்க வாய்ப்புள்ளதாக அது ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்த உண்மையான அமெரிக்க புலனாய்வுத் துறை திரட்டி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


0 thoughts on “சீனா உண்மையை மறைக்கிறது : அமெரிக்க சிஐஏ தகவல்

Leave a Reply

Your email address will not be published.