கொரோனா பாதிப்பு: தமிழகத்தில் 11,224, இந்தியாவில் 96,169
தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 11,224 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 639 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் இன்று (மே 18) காலை 9:30 மணி நிலவரப்படி, கொரோனா பாதிப்பு 96,169 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 3,029 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் மட்டும் 5,242 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. 157 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் ஒரே நாளில் கொரோனா தொற்று 5 ஆயிரம் அதிகரித்தது இது முதல்முறையாகும்.
இந்தியாவில் பரவியுள்ள கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது: இந்தியாவில் கொரோனா வைரசால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 96,169 ஆக அதிகரித்துள்ளது.
பலி எண்ணிக்கை 2,872 லிருந்து 3,029 ஆக அதிகரித்துள்ளது. பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 36,824 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 5,242 பேரருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. 157 பேர் உயிரிழந்துள்ளனர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மாநிலம் – பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை
மஹாராஷ்டிரா – 33,053, குஜராத் – 11,379, தமிழகம் – 11,224, டில்லி – 10,054, ராஜஸ்தான் – 5,202, ம.பி.,-4,977, உ.பி.,-4,259, மே.வங்கம்-2,677
செங்கல்பட்டில் 28 பேருக்கும், திருவள்ளூரில் 18 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. வெளிமாநிலங்களிலிருந்து வந்தவர்களில் 81 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் பெரும்பாலானவர்கள் மகாராஷ்டிராவிலிருந்து தமிழகம் திரும்பியவர்கள் ஆவர். இன்று மட்டும் 4 பேர் உயிரிழந்துள்ளனர். அதன்மூலம், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 78 ஆக அதிகரித்துள்ளது.
Comments are closed.