தீப்பெட்டி கணேசனை காப்பாற்றிய சினேகன்! எப்படி தெரியுமா?
நடிகர் தீப்பெட்டி கணேசனின் 2 குழந்தைகளின் இந்தாண்டு படிப்புச் செலவினை முழுமையாக ஏற்றுள்ளார் பாடலாசிரியரும், நடிகருமான சினேகன்.
ரேணிகுண்டா படத்தின் மூலம் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானவர் நடிகர் தீப்பெட்டி கணேசன், இவர் நடிகர் அஜித்துடன் பில்லா 2 திரைப்படத்திலும் நடித்திருந்தார்.
இந்த ஊரடங்கிற்கு முன்பே பட வாய்ப்புகள் குறைந்ததால் கடும் சிரமத்தில் தான் இருந்தார். அவ்வப்போது கிடைக்கும் சினிமா வாய்ப்புகளை வைத்து குடும்பத்தை நடத்தி வந்தார்.
மேலும் தனது குழந்தைகளின் படிப்பிற்கு நடிகர்கள் அஜித் அல்லது ராகவா லாரன்ஸ் உதவ வேண்டும் எனவும் கேட்டு கொண்டார். நடிகர் அஜித் இதை கண்டால் நிச்சயம் உதவுவார் எனவும் கூறியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து தனியார் யூடியூப் சேனலுக்கு, தன்னுடைய நிலைமையை விளக்கி பேட்டி ஒன்றை அளித்தார். தீப்பெட்டி கணேசன்.
இதையடுத்து தற்போது பாடலாசிரியர் மற்றும் பிக் பாஸ் பிரபலமான சினேகன் அவரின் வீட்டிற்கே சென்று நேரில் சந்தித்து, 2 வாரங்களுக்கு அவர்களுக்கு தேவைப்படும் உணவு பொருள்களை அளித்துள்ளார்.
மேலும் தீப்பெட்டி கணேசனின் குழந்தைகளின் இந்த வருடத்திற்கான படிப்பு செலவை சினேகன், செயலகம் அறக்கட்டளை சார்பாக ஏற்றுக்கொண்டுள்ளார்.
இதுபோன்று கஷ்டப்படும் கலைஞர்களுக்கு உதவ பலரும் முன் வர வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Comments are closed.