Thursday, September 10, 2026
LatestNEWS

தனி அறையில் 45 வயது பெண்; ஒரே இரவில் 5 பேர்! கோவையில் நடந்த கொடூரம்!

கோவையில் நடந்த இந்த கொடூர சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கவரிங் நகைகளை தங்க நகை என நம்ப வைத்து, ஒரே வாரத்தில் ரூ.1.37 லட்சம் பெற்றதாக கூறப்படும் 45 வயது பெண், மீண்டும் நகை அடகு வைக்க வந்தபோது நகை அடகு கடை உரிமையாளரிடம் சிக்கியுள்ளார்.

நகைகள் அனைத்தும் கவரிங் என தெரிய வந்த நிலையில், அந்த பெண்ணை கடையின் பின்புறம் உள்ள பயன்பாட்டில் இல்லாத தனி அறைக்கு அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. அங்கு உரிமையாளர் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து அந்த பெண்ணை தாக்கியுள்ளனர்.

இரவு முழுவதும் நடந்த தாக்குதலில், பலத்த காயமடைந்த பெண் மறுநாள் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். சம்பவத்திற்கு பின்னர் நகை அடகு கடை உரிமையாளர் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் குற்றத்தில் ஈடுபட்ட மற்ற நபர்களை தேடும் பணியும் நடைபெற்று வருகிறது.