தமிழ்நாடு அரசின் புதிய சொகுசு பேருந்துகள் – பயண அனுபவத்தில் புதிய அத்தியாயம்!

தமிழ்நாடு அரசின் போக்குவரத்துத் துறை சார்பில், பொதுமக்களின் பாதுகாப்பும் பயண வசதியும் உயர்த்தும் நோக்கில் 20 அதிநவீன Multi-Axle குளிர்சாதன சொகுசு பேருந்துகள் இன்று மக்களின் பயன்பாட்டிற்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

சென்னை தீவுத்திடல் வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் ஆகியோர் இந்த பேருந்து சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

இந்த புதிய பேருந்துகளில் அமைக்கப்பட்டுள்ள நவீன தொழில்நுட்ப வசதிகள், பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் சொகுசான பயண ஏற்பாடுகள் முதலமைச்சரையே வியக்கவைக்கும் அளவுக்கு உள்ளன.

ரூ.34.30 கோடி மதிப்பிலான Multi-Axle பேருந்துகள்

அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்திற்கு ரூ.34.30 கோடி மதிப்பில் வாங்கப்பட்டுள்ள இந்த 20 Multi-Axle AC பேருந்துகள், தமிழ்நாடு போக்குவரத்துத் துறையின் மூலம் முதல் முறையாக பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

மேலும், அரசு போக்குவரத்துக் கழகத்தின் பொன்விழா நிகழ்வை முன்னிட்டு, 1,05,778 ஊழியர்களுக்கு ரூ.3.33 கோடி மதிப்பிலான சுவர் கடிகாரங்கள் வழங்கும் திட்டத்தையும் முதலமைச்சர் தொடங்கி வைத்தார். இதன் அடையாளமாக 10 ஊழியர்களுக்கு நேரடியாக வழங்கப்பட்டது.

புதிய Multi-Axle சொகுசு பேருந்துகளின் முக்கிய சிறப்பம்சங்கள்

பயணிகள் வசதி

  • 2×2 சீட்டிங் அமைப்புடன் அதிகபட்சம் 51 உயர்தர இருக்கைகள்
  • UNOMINDA (Harita) VFX09 Premium Seats
  • Calf Support வசதி
  • Dual USB Mobile Charging Ports
  • பத்திரிகை இடம், பாட்டில் ஹோல்டர், காலணி வைக்கும் இடம்
  • விசாலமான Panoramic ஜன்னல்கள்
  • Overhead Luggage Compartment

ஓட்டுநர் பாதுகாப்பு & வசதி

  • Ergonomic Control Layout
  • Curved Dashboard
  • Air-Suspension Driver Seat
  • Knee Impact Protection System

மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்கள்

  • PX Advanced Suspension System
  • EVSC, ESP, ASR பாதுகாப்பு தொழில்நுட்பங்கள்
  • Fire Safety System
  • Roof Escape Hatch (அவசர வெளியேற்றம்)
  • FUP / FIP / SUPD Impact Protection
  • Rollover & Pedestrian Safety Features

சுற்றுச்சூழல் பாதுகாப்பு

  • BS-VI Emission Norms முழுமையான இணக்கம்
  • EGR + SCR Technology மூலம் குறைந்த கார்பன் உமிழ்வு
  • NOx Emission Reduction
  • Anti-Corrosion Treated Body
  • Reinforced Monocoque Structure

Smart Technology வசதிகள்

  • Front & Rear Cameras (விபத்து தடுப்பு)
  • Reverse Sensor & Camera
  • Electronic Diagnostic Control
  • Bus Tracking System
  • Emergency Exit Facilities

இந்த புதிய Multi-Axle சொகுசு பேருந்துகள், தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறையின் ஒரு மைல்கல் திட்டமாக அமைந்துள்ளன. பாதுகாப்பு, சொகுசு, தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகிய அனைத்தையும் ஒருங்கிணைத்த இந்த பேருந்துகள், பொதுமக்களின் பயண அனுபவத்தை புதிய உயரத்திற்கு கொண்டு செல்லும் என்பதில் ஐயமில்லை.



https://newstamil.in/