வியாழக்கிழமை, அக்டோபர் 1, 2026
ENTERTAINMENT

நடிகர் விஜய் வீட்டில் ரெய்டு

‘பிகில்‘ படத்தை தயாரித்த ஏ.ஜி.எஸ். நிறுவனத்திகு சொந்தமான இடங்களில் இன்று காலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையடுத்து கடலூர் மாவட்டம் நெய்வேலியில் மாஸ்டர் படப்பிடிப்பு தளத்திலேயே விஜயிடம் விசாரணை நடத்த முயற்சி செய்தனர்.

இந்நிலையில் பிகில் பட விவகாரம் தொடர்பாக சென்னை நீலாங்கரை, சாலிகிராமத்திலுள்ள நடிகர் விஜய்யின் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்திவருகின்றனர்.

வரி ஏய்ப்பு நடந்த விவகாரம் தொடர்பாக ஏ.ஜி.எஸ் நிறுவனம், அன்பு செழியன் தொடர்புள்ள 35 இடங்களில் இன்று காலை முதல் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர். பிகில் படத்துக்கு சம்பளம் வாங்கியது தொடர்பாக விஜயிடமும் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர்.