ஏர்.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் தர்பார். இந்த படம் இந்திய அளவில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
இதில் நடிகர் ரஜினி காந்தின் நடிப்பு அனைத்து தரப்பினரிடமும் வரவேற்பை பெற்று வருகிறது. இதில் கதாநாயகியாக நயன்தாரா நடித்துள்ளார். இன்று இரண்டாவது வாரத்தை எட்டியுள்ள இப்படம் 200 கோடி ரூபாய் வசூலைக் கடந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. படம் ரிலீஸான அன்று சென்னையில் மட்டும் ரூ. 2.27 கோடி வசூல் செய்தது.
கடந்த ஞாயிறு வரையிலான நான்கு நாட்கள் வசூலாக 150 கோடியைக் கடந்ததாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. கடந்த மூன்று நாள் வசூலாக மேலும் 50 கோடி ரூபாயை வசூலித்து, தற்போது 200 கோடி ரூபாய் வசூலைக் கடந்துள்ளதாக கோலிவுட்டில் தெரிவிக்கிறார்கள்.
நேற்றைய தினம் மட்டும் சென்னையில் படம் ரூ. 1.02 கோடி வசூலித்துள்ளது. சுமார் 200 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாராகியுள்ளதாக சொல்லப்படும் இந்தப் படம் ஆஹா, ஓஹோவென வசூலைக் குவிக்கவில்லை என்றாலும் நஷ்டத்தை ஏற்படுத்தாது என்றே சொல்கிறார்கள்.
இந்த வாரத்திற்குள் தமிழ்நாடு வசூல் லாபத்தில் நுழைந்துவிடும் என்பதுதான் கூடுதல் தகவல்.