சசிகலா பற்றிய தர்பார் படத்தில் சர்ச்சை வசனம் – தர்பார் படக்குழுவை எச்சரித்த சசிகலா தரப்பு!

ஏ.ஆர்.முருகதாஸ் – ரஜினிகாந்த் கூட்டணியில் இன்று வெளியான படம் தர்பார். இந்தப் படத்தில் ஒரு காட்சியில், சிறை அதிகாரி ஒருவர் ரஜினியிடம் “இப்ப எல்லாம் சிறை கைதிகள் ஜாலியா ஷாப்பிங் போயிட்டு வர்றாங்க சார்” என்ற வசனம் இடம்பெற்றுள்ளது

சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் தண்டனை அனுபவித்து வரும் சசிகலா கவனத்தில் கொண்டுதான் இந்த வசனம் படத்தில் வருவதாக பேசப்பட்டது.

இதற்கிடையில் தமிழக அமைச்சர் ஜெயக்குமார், “பணம் பாதாளம் வரை பாயும் என்பார்கள். ஆனால் படம் சிறைச்சாலை வரை பாய்வதாக கருத்து உள்ளது. சசிகலாவை பற்றிய கருத்தாக இருக்கும் என்று நினைக்கிறேன். இந்த கருத்து நல்ல கருத்துதான். பொதுமக்கள் வரவேற்கக்கூடிய கருத்துதான்” என்று கூறினார்.

இந்நிலையில் வினய்குமாரின் அறிக்கையில் சசிகலா ஷாப்பிங் சென்றதாக எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை. அப்படி இருக்க தர்பார் படத்தில் சசிகலாவை மறைமுகமாக விமர்சித்து வசனம் இருந்தால் உடனே நீக்க வேண்டும்.

அப்படி நீக்காவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று சசிகலா வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் தர்பார் படக்குழுவிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அதேபோல் ஆதாரம் இல்லாமல் பேசும் ஜெயக்குமார் மீதும் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வைப்போம் என்றும் வழன்க்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் கூறியுள்ளார்.

மேலும் படிக்க – தர்பார்: ‘தமிழ் ராக்கர்ஸை அசைக்க முடியாது – மாற்றுவழியே தீர்வு’



Comments are closed.

https://newstamil.in/