வீடியோ: தமிழகத்திற்கு நல்லாட்சி விருது கொடுத்தவர்களை அடிக்க வேண்டும் – மு.க.ஸ்டாலின்
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜாவின் மகன் பிரபாகர ராஜா மற்றும் ஹெலன் சத்யா அவர்களின் திருமணம் கோபாலபுரத்தில் உள்ள சி.எஸ்.ஐ. தூய ஜார்ஜ் பேராலயத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின் பேசுகையில், தமிழக அரசுக்கு நல்லாட்சி விருது தந்தவர்களை முதலில் கூட்டி வந்து அடிக்கவேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மேலும் தமிழகத்தில் தற்போது லஞ்சம், ஊழல், கமிஷன் ஆட்சி தான் நடக்கிறது. எதிர்த்து கேள்வி கேட்கும் உரிமையை கொண்டு வந்தவர் பெரியார். இன்று அவரையே விமர்சிக்கும் நிலை உள்ளது.
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு நாடாளுமன்றத்தில் ஆதரவு அளித்த ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்கள் தற்போது அதனை எதிர்க்கின்றன. அதிமுகவும் 12 வாக்குகள் அளித்துள்ளது. இவர்கள் சிஏஏ-வை எதிர்த்து சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டுவந்து நிறைவேற்றினால் நானே இவர்களை பாராட்டுவேன்.
தமிழகத்தில் நல்லாட்சி நடைபெறுவதற்காக விருது பெற்றுள்ளதாக முதலமைச்சர் கூறி வருகிறார். விருது கொடுத்தவர்களைத்தான் அடிக்க வேண்டும் என்று ஸ்டாலின் பேசினார். மத்திய அரசுக்கு அடங்கும் தமிழக அரசை போல் மணமக்கள் இருக்கக் கூடாது என கூறியுள்ளார்.
Comments are closed.