தமிழக அமைச்சர்கள் பட்டியல் வெளியீடு

தமிழகத்தில் நாளை (மே 7) அமைச்சரவை பதவியேற்பு விழா நடைபெறவுள்ள சூழலில், அமைச்சர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது. தமிழகத்தின் முதல்வராக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் நாளை பதவியேற்கவுள்ளார். இந்தநிலையில், யார் யாருக்கு எந்தெந்த அமைச்சரவை ஒதுக்கப்படவுள்ளது என்ற பட்டியல் வெளியாகியுள்ளது.

அதன்படி, முதல்வராக பதவியேற்கும் மு.க.ஸ்டாலின், மக்கள், பொது நிர்வாகம், இந்திய ஆட்சிப் பணி, இந்தியக் காவல் பணி, மாவட்ட வருவாய் அதிகாரிகள், உள்துறை, சிறப்புத் திட்டங்கள், மாற்றுத்திறனாளிகள் நல வாரியம் ஆகிய துறைகளை தனக்கு ஒதுக்கிறார்.

அமைச்சர்கள் பட்டியல்:

மு.க. ஸ்டாலின் – முதலமைச்சர்

துரைமுருகன் – நீர்வளத்துறை அமைச்சர்

கே.என்.நேரு – நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர்

இ.பெரியசாமி – கூட்டுறவுத்துறை அமைச்சர்

க. பொன்முடி – உயர்கல்வித்துறை அமைச்சர்

எ.வ.வேலு – பொதுப்பணித்துறை அமைச்சர்

எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் – வேளாண்மை துறை அமைச்சர்

கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் – வருவாய்த்துறை அமைச்சர்

தங்கம் தென்னரசு – தொழில்துறை அமைச்சர்

எஸ். ரகுபதி – சட்டத்துறை அமைச்சர்

முத்துச்சாமி – வீட்டுவசதி துறை அமைச்சர்

பெரியகருப்பன் – ஊரகத்துறை அமைச்சர்

தா.மோ. அன்பரசன் – ஊரகத்தொழில்துறை அமைச்சர்

சாமிநாதன் – செய்தித்துறை அமைச்சர்

கீதா ஜீவன் – சமூக நலன் – மகளிர் உரிமைத்துறை அமைச்சர்

அனிதா ராதாகிருஷ்ணன் – மீன்வளம் – கால்நடை துறை அமைச்சர்

ராஜகண்ணப்பன் – போக்குவரத்து துறை அமைச்சர்

ராமசந்திரன் – வனத்துறை அமைச்சர்

சக்கரபாணி – உணவுத்துறை அமைச்சர்

செந்தில்பாலாஜி – மின்சாரத்துறை அமைச்சர்

ஆர்.காந்தி – கைத்தறி அமைச்சர்

மா. சுப்பிரமணியன் – நல்வாழ்வுத்துறை அமைச்சர்

மூர்த்தி – வணிகவரித்துறை அமைச்சர்

சிவசங்கர் – பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர்

சேகர்பாபு – அறநிலையத்துறை அமைச்சர்

பழனிவேல் தியாகராஜன் – நிதி அமைச்சர்

சா.மு. நாசர் – பால்வளத்துறை

செஞ்சி மஸ்தான் – சிறுபான்மைதுறை – வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர்

அன்பில் மகேஸ் பொய்யாமொழி – பள்ளிக்கல்வி துறை

மெய்யநாதன் – சுற்றுச்சூழல் துறை அமைச்சர்

சி.வி.கணேசன் – தொழிலாளர்துறை அமைச்சர்

மனோ தங்கராஜ் – தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர்

மதிவேந்தன் – சுற்றுலாத்துறை அமைச்சர்

கயல்விழி – ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர்Comments are closed.

https://newstamil.in/