ரோஜா கூட ஒன்னா இருக்க முடியல – இ பாஸ் கிடைக்காத விரக்தியில் கணவன் தற்கொலை

“ரோஜா கூட ஒன்னா இருக்க முடியலயே” என்று மனம் புழுங்கியபடியே இருந்திருக்கிறார் விக்கி… பிரசவ நேரத்தில் மனைவி பக்கத்தில் கூட இருக்க முடியவில்லையே என்ற வேதனையிலும், இ-பாஸ்-ம் கிடைக்காத விரக்தியிலும் விக்கி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சோக சம்பவம் காஞ்சிபுரத்தில் நடந்துள்ளது.

இதையடுத்து, அவரின் நண்பருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர் வீட்டில் சென்று பார்த்த போது, விக்னேஸ்வரன் தூக்கில் தொங்கியவாறு சடலமாக கிடந்துள்ளார். உடலை மீட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

காஞ்சிபுரம் மாகாளியம்மன் கோவில் பகுதியை சேர்ந்த விக்னேஷவரனின், மனைவி ரோஜா, பிரசவத்திற்காக தாம்பரத்தில் உள்ள தாய் வீட்டிற்கு சென்றார். இரண்டு நாட்களில் குழந்தை பிறக்க வாய்ப்புள்ளதாக கூறியதை அடுத்து, தாம்பரம் செல்ல இ-பாஸுக்கு விண்ணப்பித்துள்ளார்.

ஆனால், அது கிடைக்காததால் விரக்தியில் இருந்துள்ளார். இந்நிலையில் பிரசவ வலி காரணமாக இன்று காலை செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் ரோஜா அனுமதிக்கப்பட்டார். இதை தெரிவிப்பதற்காக விக்னேஷ்வருனுக்கு தொடர்பு கொண்டபோது, அவர் செல்போனை எடுக்கவில்லை.

இதையடுத்து, அவரின் நண்பருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர் வீட்டில் சென்று பார்த்த போது, விக்னேஸ்வரன் தூக்கில் தொங்கியவாறு சடலமாக கிடந்துள்ளார். உடலை மீட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும்.

மாநில உதவிமையம்: 104

சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் – 044 -24640050


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *