ஊரடங்கை மீறிய 3.24 லட்சம் பேர் கைது செய்து ஜாமினில் விடுதலை
தமிழகத்தில் ஊரடங்கை மீறி வாகனங்களில் வெளியே சுற்றிய 3,24,269 பேர் கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தகவல் வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக போலீசார் வெளியிட்ட அறிக்கை : ஊரடங்கை மீறி, அத்யாவசியமின்றி சாலைகளில் உலா வந்த 3,24,269 பேர் கைதாகி ஜாமினில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 2,76,183 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், அபராதமாக ரூ.3.27 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. 3,06,339 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Comments are closed.