சீனாவைக் குறிவைக்கும் டிரம்ப் – அமெரிக்கா விசாரணை

சீனாவில் இருந்து உலகம் முழுவதும் பரவிய கொரோனா வைரசால், 30 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்; 2 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் இறந்துள்ளனர். அதிகபட்சமாக அமெரிக்காவில், 10 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்; 56 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளனர்.

கொரோனா பலி எண்ணிக்கையை சீனா திடீர் என்று உயர்த்தி இருப்பது அந்நாட்டுக்கு எதிராக திரும்ப வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். அமெரிக்கா இதை கண்டிப்பாக பயன்படுத்தி சீனாவை நெருக்கும் என்கிறார்கள்.

COVID-19 கிருமித்தொற்று உலகம் முழுவதும் பரவுவதற்கு முன், சீனா அதைத் தடுத்து நிறுத்தியிருக்கலாம் என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் மீண்டும் தெரிவித்துள்ளார்.

கிருமிப் பரவலின் தொடர்பில் என்ன நடந்தது என்பதுபற்றி, அமெரிக்கா தீவிரமான புலன் விசாரணை மேற்கொள்ளும் என்று அவர் சொன்னார்.

மேலும், வைரஸ் பாதிப்பால் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சிக்கு இழப்பீடாக ஜெர்மனி 165 பில்லியன் அமெரிக்க டாலர்களை சீனாவிடம் கேட்டுள்ளது. அமெரிக்காவுக்கும் உலகிற்கும் ஏற்பட்ட மிகப்பெரிய சேதம் இது. அதனால், ஜெர்மனி கேட்கும் தொகையைவிட அதிகமான தொகையை நாங்கள் கேட்க உள்ளோம். இறுதித் தொகை இன்னும் தீர்மானிக்கப்படவில்லை, இவ்வாறு டிரம்ப் கூறினார்.



Comments are closed.

https://newstamil.in/