பெரியாரை இழிவுபடுத்திய பாஜகவிற்கு தலைவர்கள் கண்டனம்
பெரியாரை இழிவுபடுத்திய பாஜகவிற்கு தலைவர்கள் கண்டனம், பெரியாரை இழிவுபடுத்தும் வகையில் பதிவிட்ட தமிழக பாஜகவிற்கு பல்வேறு கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ஸ்டாலின் இதுகுறித்து தனது ட்விட்டர் பதிவில் “பெரியாரை இழிவுபடுத்தும் கருத்தைப் பதிவு செய்து, எதிர்ப்பு வந்ததும் நீக்கியுள்ளது பாஜக அப்பதிவை போடுவதற்கு முன் யோசித்திருக்கலாமே?
அந்த பயம் இருக்கட்டும்! மரணித்த பிறகும் மருள வைத்துள்ளார் பெரியார்! அதிமுக, இதற்காவது புலியாகப் பாயுமா? இல்லை மண்புழுவாய் பதுங்குமா?”
கனிமொழி தனது ட்விட்டர் பதிவில் “ பெண்ணுரிமை போற்றும் சமூகம் அமைய அயராது உழைத்தவர் பெரியார், பெண்ணுரிமை, நாகரிகம் பற்றி அறியாதவர்களிடமிருந்து இதுபோன்ற கருத்துகள் வருவது சகஜம் என்று கனிமொழி தெரிவித்துள்ளார்.