‘மன்னிப்பு கேட்க மாட்டேன்: ரஜினிகாந்த் அதிரடி – வீடியோ
துக்ளக் 50வது ஆண்டு விழாவில் பேசிய சர்ச்சைக்குரிய கருத்திற்கு தான் மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
சென்னையில் துக்ளக் விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசியது பெரிய பரபரப்பாகி உள்ளது. துக்ளக் இதழின் 50ஆம் ஆண்டு நிறைவு விழா கடந்த வாரம் சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் ரஜினி பெரியார் மற்றும் முரசொலி குறித்து பேசினார்.
மேலும் இந்துக் கடவுள்களுக்கு எதிராக பெரியார் பேரணி நடத்தினார். இதுபற்றி யாருமே எழுதாத சூழலில் துக்ளக் இதழில் சோ தைரியமாக எழுதியதாக குறிப்பிட்டார். இந்நிலையில் பெரியாரின் போராட்டம் பற்றி ரஜினி வரலாற்று ரீதியாக தவறான கருத்துகளை கூறுவதாக சிலர் குற்றம்சாட்டி வருகின்றனர்.
ஆனால் சோ மட்டும் தைரியமாக துக்ளக்கில் எழுதினார். அப்போதைய முதல்வர் கருணாநிதி அதை கடுமையாக எதிர்த்தார்.இதனால் துக்ளக் பத்திரிக்கை நாடு முழுக்க பிரபலம் அடைந்தது, என்று ரஜினி குறிப்பிட்டார்.
இந்நிலையில் சென்னை போயஸ் கார்டனில் உள்ள தனது இல்லத்தின் முன்பு நடிகர் ரஜினிகாந்த் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், துக்ளக் 50வது ஆண்டு விழாவில் நான் பேசிய விஷயம் சர்ச்சையாகி இருக்கிறது.
நான் பார்த்ததை நான் சொல்கிறேன், அவர்களை பார்த்ததை அவர்கள் சொல்கிறார்கள். இதை இனியும் பெரிதுபடுத்த கூடாது. இதை மறுக்க வேண்டிய சம்பவம் கிடையாது, மறக்க வேண்டிய சம்பவம், என்று ரஜினிகாந்த் தனது பெட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
Comments are closed.