பெரியாரை பற்றி பேசும்போது யோசித்து பேசவேண்டும் – மு.க.ஸ்டாலின்

ரஜினி பெரியாரை பற்றி இவ்வளவு பேசியும் திமுக மவுனமாக இருப்பது ஏன்? என்ற கேள்வி எழுந்து வந்த நிலையில் மு.க.ஸ்டாலின் ரஜினிக்கு அறிவுரை கூறியுள்ளார் .

இன்று தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், பெரியார் பற்றி நான் பேசியதற்கு மன்னிப்பு கேட்ட முடியாது என்று விளக்கம் அளித்தார். மேலும் இல்லாத விசயத்தை நான் கூறவில்லை, கற்பனையாகவும் எதையும் கூறவில்லை, மற்றவர்கள் கூறியது பத்திரிகையில் வந்ததையும் தான் நான் கூறியுள்ளேன் என்று ரஜினி தெரிவித்தார்.

ரஜினிகாந்தின் கருத்து பற்றிய பத்திரிகையாளர்களின் கேள்விக்கு பதிலளித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ரஜினிக்கு அவரது பாணியிலேயே மிகச் சுருக்கமான பேட்டியின்மூலம் பதிலடி கொடுத்து விட்டார்.

“95 ஆண்டு காலம் தமிழினத்திற்காக போராடியவர் பெரியார். அப்படிப்பட்டவரைப் பற்றிப் பேசும்போது சிந்தித்து, யோசித்துப் பேச வேண்டும். அதை நடிகர் ரஜினிகாந்த் உணர வேண்டும் என்று அழகாக பதிலடி கொடுத்து விட்டார் ஸ்டாலின்.

அதை விட முக்கியமாக, ரஜினியை வெறும் நடிகர்தான், அரசியல்வாதி அல்ல” என்றும் ஸ்டாலின் பொளேர் என்று விளாசி விட்டு போய் விட்டார்.


73 thoughts on “பெரியாரை பற்றி பேசும்போது யோசித்து பேசவேண்டும் – மு.க.ஸ்டாலின்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *