‘பிறப்புச் சான்றிதழ் எடப்பாடி பழனிசாமிக்கு இல்லை’ – சீமான் பேச்சு

திருச்சியில் குடியுரிமை திருத்த சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில் தொடர் போராட்டம் நடைப்பெற்று வருகிறது.

இந்நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனக்கு பிறப்புச் சான்றிதழ் இல்லை என்று என்னிடம் கூறியுள்ளார் என சீமான் குறிப்பிட்டுள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய சீமான், “என்.பி.ஆருக்கு எதிராக மற்ற மாநிலங்கள் தீர்மானம் நிறைவேற்றியது போன்று தமிழக அரசும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனக்கு பிறப்புச்சான்றிதழ் இல்லை என என்னிடமே கூறியுள்ளார்.

நம் நாட்டின் குடியரசுத் தலைவருக்கும் பிரதமருக்கும் கூட பிறப்புச்சான்றிதழ் இருக்காது. சிஏஏ சட்டம் முஸ்லிம்களுக்கு மட்டும் எதிரானது அல்ல; ஒட்டு மொத்த இந்திய மக்களுக்கு எதிரானது. இந்தச் சட்டத்தில் இருக்கும் நடைமுறையால் ஒட்டுமொத்த மக்களே முகாமுக்கு செல்ல வேண்டிய நிலைதான் வரும்.

இந்தியாவிற்குள் இனிமேல் அகதிகளாக வருபவர்களுக்கு குடியுரிமை தர மாட்டோம் எனக் கூறலாமே தவிர, ஏற்கனவே வந்தவர்களுக்கு குடியுரிமை தர மாட்டோம் என்பது, குறிப்பாக இஸ்லாமியர்களுக்கு தரமாட்டோம் என கூறுவது பாசிசம்.



Comments are closed.

https://newstamil.in/