அதிமுக முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி – ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு.

ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், முதல்வர் வேட்பாளர் குறித்த அறிவிப்பை வெளியிட்டார். அதில், பழனிசாமி தான் வரக்கூடிய தமிழக சட்டசபைக்கான அதிமுக.,வின் முதல்வர் வேட்பாளர் என அக்கட்சியின் சார்பாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

முதல்வர் வேட்பாளர் பழனிசாமிக்கு, பூங்கொத்து கொடுத்தும், சால்வை அணிவித்தும் பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்தார்.

11 பேர் கொண்ட அதிமுக வழிகாட்டுதல் குழு அறிவிப்பு : அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, எஸ்.பி வேலுமணி, ஜெயக்குமார், சிவி சண்முகம் , ஆர்.காமராஜர், முன்னாள் எம்.எல்.ஏ ஏ.சி.டி பிரபாகர், முன்னாள் எம்.பி பி.எச் மனோஜ் பாண்டியன், முன்னாள் அமைச்சர் பா.மோகன், முன்னாள் எம்.பி கோபால கிருஷ்ணன், சோழவந்தான் எம்.எல்.ஏ மாணிக்கம்.

அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கட்சி தொண்டர்கள் இனிப்புகள் வழங்கியும், பட்டாசுகள் வெடித்தும் கொண்டாட்டம்.



Comments are closed.

https://newstamil.in/