3வது நாளாக வேலை நிறுத்தம்; குடிநீர் கேன் 50 ரூபாய் விற்கும் அபாயம்!
தமிழகம் முழுவதும் அனுமதியில்லாமல் செயல்பட்டு வந்த குடிநீர் ஆலைகளை சீல் வைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், தனியார் குடிநர் கேன் உற்பத்தியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்து வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் நிலத்தடி நீர் எடுக்கும் தொழிலில் ஆயிரத்து 650 நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மட்டும் 460 ஆலைகள் இயங்கி வருகின்றன. ஆனால், அதில் 80 விழுக்காடு ஆலைகள் அனுமதியின்றி செயல்பட்டு வருவதாக புகார் எழுந்தது.
இதுதொடர்பான வழக்கில், தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது சம்பந்தப்பட்ட ஆலைகள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்ற 3-ம் தேதிக்குள் அறிக்கை சமர்பிக்க வேண்டும்.
இன்று 3வது நாளாக அவர்களது வேலைநிறுத்தம் தொடரும் நிலையில், சென்னை உள்படபல இடங்களில் கேன் குடிநீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. இதனால் பொதுமக்கள் சொல்லொனா துயரத்துக்கு ஆளாகி வருகிறார்கள். இதனால் 50 ரூபாய் வரை விற்பனை செய்யப்படும் அபாயம் இருப்பதாக பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.