கல்லையும், கட்டையையும் வச்சு அடிச்சாங்க – டாக்டர் கண்ணீர் மல்க உருக்கம்! வீடியோ
சென்னையில், கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு உயிரிழந்த டாக்டரின் உடலை அடக்கம் செய்ய , எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம் நடத்தியதோடு, ஆம்புலன்ஸ் மீது தாக்குதல் நடத்தினர். இதற்கு, எதிர்ப்பு தெரிவித்துள்ள டாக்டர் ஒருவர், இது போன்று செய்ய வேண்டாம், அப்படி செய்வீர்கள் என கனவில் கூட நினைத்தது இல்லை என வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.
சென்னை சேத்துப்பட்டில் உள்ள தனியார் மருத்துவமனையின் இயக்குநர் இரண்டு வாரங்களுக்கு முன் கொரொனா தொற்று கண்டறியப்பட்டு அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவர் சிகிச்சைப் பலனிறி நேற்று உயிரிழந்தார்.
இதனிடையே, டாக்டரின் உடலை அடக்கம் செய்ய அண்ணா நகர் வேலங்காடு பகுதிக்கு கொண்டு சென்றனர். கொரோனா தொற்றுள்ள உடல் என்பதால் அவரது மனைவி, மகன் மற்றும் நண்பர்கள் வெகு சிலர் மட்டுமே உடலை எடுத்து சென்றுள்ளனர். கொரோனா தொற்றால் பாதிக்கப்படவரின் உடலை இங்கே புதைக்கக் கூடாது என அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து அப்பகுதிக்கு கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு, டாக்டர் உடல் அடக்கம் செய்யப்பட்டது. போராட்டம் தொடர்பாக சிலரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments are closed.