சென்னையில் ஐந்தாவது நாளாக ஆயிரத்தைக் கடந்த தொற்று

தமிழகத்தில் தொடர்ந்து ஐந்தாவது நாளாக இன்றும் ஆயிரத்திற்கும் அதிகமாக புதிய கொரோனா தொற்று பதிவாகியுள்ளது. சென்னையில் இன்று 1,072 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 27,256 ஆக அதிகரித்துள்ளது

கொரோனா பாதிப்பில் தமிழகத்தில் இன்று 12 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் 10 பேரும், செங்கல்பட்டு, வேலூரில் தலா ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.

இன்று மட்டும் 585 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ள நிலையில், மொத்தம் 14,901 பேர் இதுவரை டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.



Comments are closed.

https://newstamil.in/