செம்பருத்தி சீரியல் “திரும்ப வந்துட்டோம்”
செம்பருத்தி சீரியல் பற்றி ஜி தமிழ் நிறுவனம் ட்விட் செய்துள்ளது “திரும்ப வந்துட்டோம். சின்ன திரைக்கு வர இன்னும் கொஞ்ச நாள் தான். Wait பண்ணுங்க.”
தனியார் தொலைக்காட்சிகள் எல்லாம் பெரும்பாலும் தொடர்களை நம்பியே பயணித்து வந்தது. ஒவ்வொரு தொலைக்காட்சியிலும், குறைந்தது 20 தொடர்களாவது தினமும் ஒளிப்பரப்பாகி வந்த நிலையில், கரோனாவினால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதும், தொடர்களின் படப்பிடிப்பு எல்லாம் நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் பிரபல முன்னணி தொலைக்காட்சிகளில் ஒன்றான ஜி தமிழ் நிறுவனம் இந்த உத்தரவை மேற்கொண்டுள்ளது. ஆம் நம் அனைவருக்கும் மிகவும் பிடித்த செம்பருத்தி சீரியல் படப்பிடிப்பு துவங்கிப்போவதாக ஜி தமிழ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இது செம்பருத்தி சீரியல் ரசிகர்களுக்கு மாபெரும் நற்செய்தியாகவும், மிக பெரிய கொண்டாட்டமாகவும் அமையும். மேலும் இதனால் மிகவும் கீழே சரிந்த ஜி தமிழ் தொலைக்காட்சியின் TRP கண்டிப்பாக உயரும் என்பதில் எந்த விதமான சந்தேகமும் இல்லை.
Comments are closed.