மிரட்டும் கொரோன- நாடு முழுவதும் கல்வி நிறுவனங்கள் மூடல்

இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக நாடு முழுவதுமுள்ள கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

கொரோனா பாதிப்பு குறித்து அதனைத் தடுக்க எடுக்கப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் மத்திய சுகாதாரத்துறை இணைச் செயலாளர் லாவ் அகர்வால் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது அவர், ‘தற்போதைய நிலவரப்படி, குணமான 13 பேர் மற்றும் உயிரிழந்த 2 பேருக்கும் சேர்த்து, இந்தியாவில் 114 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது’ என்றார்.



Comments are closed.

https://newstamil.in/