கொரோனாவை பரப்பும் சைக்கோ நபர்
உலகளவில் கொரோனா வைரஸால் இதுவரை 9,59,000-க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 49,154 ஆக அதிகரித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், இங்கிலாந்து நாட்டில் மர்மநபர் ஒருவர் இரவில் சாலையோரங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் கார்களின் கைப்பிடிகளில் உழிழ்நீரை தடவி சென்றுள்ளார்.
இது அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அந்நாட்டு மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Comments are closed.